• Sep 20 2025

கட்டுக்கடங்காத துக்கம், பெரும் இழப்பு, என்ன பண்ண முடியும்? நடனமும், இசையும் தான் ஆறுதல்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் அவருடைய உடலுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் துறையை சார்ந்தவர்களும் கட்சி பேதமின்றி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

இதை தொடர்ந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய மனைவி டான்ஸ் ஆடி அவரை வழியனுப்பி வைத்தது பல விமர்சங்களுக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன் பதிலளித்து உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், சமூக ஊடகங்களில் தற்போது எழுந்துள்ள விமர்சனங்கள் தமிழர்களின் பண்பாட்டு ரீதியாக ஒரு புரிதல் இல்லாமல், ஒரு பக்கம் சார்ந்து உணர்வில் இருந்து இழக்கக் கூடிய கேள்விகள் என புரிகிறது.


வெளிப்படையாக சொல்லப் போனால் ஒருவரின் இறுதிச் சடங்கில் ஆடுபவர்கள் கீழ் சாதியினர் தான். ஆனால் கீழ் சாதியோ மேல் சாதியோ எல்லாருக்கும் ஒரே மாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை. எல்லாம் வேறு வேறு தான்.


ஆனால் ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்.

அதைத்தான் ரோபோ சங்கரின் மனைவியும் செய்துள்ளார். அவர்களின் காதல் நடனத்தில் தொடங்கி நடனத்தில் முடிந்துள்ளது என்றார். 

Advertisement

Advertisement