சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத் திரை உலகில் பயணித்து வருபவர் தான் நடிகர் மோகன்லால். இவர் இதுவரையில் 350 படங்களுக்கு மேலே நடித்துள்ளார். மலையாள படங்களில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் தனது தனித்துவமான நடிப்பை நிலை நிறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு 2003 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது 40 ஆண்டுகால சினிமா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய கௌரமாக கருதப்படும் இந்த விருது 2003 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாதாசாகேப் பால்கே விருது எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று, டெல்லியில் நடைபெற உள்ள 21வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி பெற்றுக் கொண்டார். இந்த முறை மோகன்லால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெருமையாக கருதப்படுகின்றது.
Listen News!