• Sep 20 2024

அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகும் உதயநிதி-வெளியானது புதிய அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கே.ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் உதவிப்பணியாளராக சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . ஒரு கல் ஒரு கண்ணாடி, இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

மேலும் இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, மனிதன் போன்ற படங்களில் நடித்து பிரபல்யமானார். இவர் நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், விளங்குகின்றார்.தொடர்ந்து 2020இல் வெளிவந்த சைக்கோ என்ற படத்தில் கண் தெரியாத தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல விமர்சனங்களையும், வணிக ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இப்படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தமிழ் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நெஞ்சுக்குள் நீதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆறி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பொருத்தமான காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.இத்திரைப்படம் 12 கோடி ரூபாயை மொத்தமாக வசூல் செய்து 6 கோடி ரூபாயை ஷேர் ஆக பெற்று தந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்திலான புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கழகத் தலைவன் என்று பெயரிடப்பட்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கின்றன.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருவதும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement