மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ என்ற திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணிகண்டனுக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’லவ்வர்’ பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் ’குட் நைட்’ படம் போலவே வெற்றிப்படமாக மணிகண்டனுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் கண்ணன் ரவி, ஹரிணி, நிகிலா, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்க்க அமைச்சர் உதயநிதி மணிகண்டனுக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை அடுத்து மணிகண்டன் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறிய போது ’நீங்கள் ’லவ்வர்’ படம் பார்த்து எனக்கு போன் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் லவ்வர் படத்தை விரும்பி ரசித்தீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன்.
என்னை போன்ற வளரும் கலைஞருக்கு உங்களை போன்ற பாராட்டுக்கள் மிகவும் ஊக்குவிப்பதாக இருக்கும். இது எனக்கு அதிக ஆற்றலை தருகிறது, இன்னும் அதிகமாக சாதனை செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது’ என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Listen News!