• Apr 26 2024

உதயநிதியின் கலகத் தலைவன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருக்கின்றார்.இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது. இதனை அடுத்து இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 


இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே இப்படத்தின் இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கலகத் தலைவன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரில், கண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சி ஒரு வேட்டை நடந்துட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement