• Apr 20 2024

துணிவு படத்தில் கெட்ட வார்தையால் பேசி இருக்கின்றேன்- பிக்பாஸ் பிரபலம் கூறிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படத்தினை எச்.வினோத் இயக்கவுள்ளதோடு பிரபல பாலிவூட் தயாரிப்பாளரான போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். அதே போல வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


இருப்பினும்  தற்போதுவரை இப்படத்தின் புதிய அப்டேட் ஏதும் வரவில்லை, ஆனால் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகள் தங்களின் டப்பிங் பணியை முடித்துள்ளது குறித்து பதிவிட்டு இருந்தனர்.

அப்படி நடிகை மமதி சாரி துணிவு திரைப்படத்தில் நடித்தது குறித்தும் டப்பிங் குறித்தும் பதிவிட்டு இருந்தார். இதனிடையே அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் துணிவு படத்தில் மிகவும் குறைவான காட்சியில் நடித்திருப்பதாகவும்,கெட்டவார்த்தை பேசும்படியான காட்சியில் நடித்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.  


இவரைத் தவிர இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான அமீர் பாவனி சிபி ஆகியோரும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement