• Apr 29 2024

ஒரே நாளில் வெளியாகும் விமலின் அட்டகாசமான இரு படங்கள்... குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த விமல் 'பசங்க' படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூடவா' என பல நல்ல படங்களை கொடுத்தார். இருப்பினும் திடீரென சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை விமலுக்கு பெற்றுத் தரவில்லை.


இருப்பினும் விலங்கு வெப் சீரிஸ் இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி கொடுத்தது. இதனால் விலங்கு சீசன் 2வும் விரைவில் வரும் எனக் கூறப்படுகின்றது.


இந்நிலையில் விமல் ரசிகர்களுக்கு தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விமல் நடிக்கும் 'குலசாமி' திரைப்படம் ஏப்ரல் 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதே நாளில் அவர் நடித்த 'தெய்வ மச்சான்' திரைப்படமும் வெளியாகும் எனக் கூறப்படுகின்றது.


இந்த விடயமானது விமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் எந்தப் படத்தை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement