• Jan 19 2025

சர்ச்சைகளின் மன்னன் TTF வாசன் முதல் CWC வரை... பிக் பாஸ் சீசன் 8ல் என்ட்ரியாகும் பிரபலங்கள்?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்கள், இரண்டு வீடு, 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என மிகவும் மாறுபட்ட ரீதியில் இந்த இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக வந்த வைல்ட் கார்ட் என்ட்ரியால் பிக் பாஸ் வீடே ரணகலமானது. அதிலும் பூர்ணிமா, மாயா, விசித்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதன் இறுதியில் இந்த சீசனில் வெற்றி பெறுவது யார் என்பது பலருக்கும் கேள்வியாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் மாயா, அர்ச்சனா மற்றும் மணிச்சந்திரா ஆகியோர்களுக்கு அதிக அளவான ஆதரவு காணப்பட்டது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்பது பலராலும் கணிக்க முடியாமல் இருந்தது. எனினும் இறுதியில் பிக் பாஸ் டைட்டிலை அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் யார் யாரெல்லாம் பங்கு பற்ற வாய்ப்பு இருக்கு என்ற தகவல்கள் கசைந்துள்ளன.

அந்த வகையில் ஷாலினி சோயாவின் காதலனும், பிரபல யூட்யூபருமான டிடிஎஃப் வாசனை உள்ளே அழைத்து வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றதாம். அதற்கு காரணம் சமீப காலமாகவே டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கி வருவது தான். இதனால் அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது மேலும் பரபரப்பை கொடுக்கும் என்கின்றார்கள்.

அத்துடன் இந்த முறை சமூக வலைத்தள நட்சத்திரங்கள் அதிகமாக பங்கு பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், விஜய் டிவியில் இருந்த தொகுப்பாளர்கள் சிலரும் இந்த நிகழ்ச்சிக்குள் என்ட்ரி ஆகலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதுபோலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய இந்திரஜா, ரோபோ சங்கர் அவர்கள் இருவரில் ஒருவர் இந்த முறை பிக் பாஸ்க்குள் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement