• Jan 18 2025

இந்த வருஷம் என்னோட வருஷம் சொல்லாமல் சொல்லும் எஸ்.ஜெ.சூர்யா !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திறைமையுள்ளவர்களை கைநீட்டி அழைத்தால் கூட அவர்களுக்கான இடங்களை தேர்ந்தெடுத்து சரிவர அவர்களின் இருக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவரவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Movie (2004): Release Date, Cast, Ott ...

இதை சரிவர புரிந்துகொண்ட நடிகர்களில் முதன்மையானவர் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா."வாலி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா முதல் படத்தின் மெகா வெற்றியோடு அடுத்தடுத்து பல நல்ல படங்களை கொடுத்தார்.

Actor SJ Surya birthday special, Actor ...

நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா அடுத்தடுத்து கள்வனின் காதலி,வியாபாரி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.யாரும் எதிர்பாரா வகையில் வில்லன் பாத்திரங்களில் நடிக்க தொடங்கிய எஸ்.ஜெ.சூர்யா அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்து ஹீரோவை தாண்டிய ஒரு வசீகரத்தை பெற்றார்.

Mark Antony Tamil Movie Sj Surya GIF ...

இந்தாண்டு செம பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வரும் எஸ்.ஜெ.சூர்யா வாரத்துக்கு வாரம் வெளியாகும் அப்டேட் அனைத்திலும் தன் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் நடித்து வருகிறார்.விரிவாக சொன்னால் சிலநாட்களுக்கு முன் வெளியாகியிருக்கும் "இந்தியன் 2" தொடங்கி வெளியாகவிருக்கும் "ராயன்" , "வீர தீர சூரன்" , "எல் ஐ சி " ,"எஸ்கே 24" ,"சர்தார் 2" என அனைத்து படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் எஸ்.ஜெ.சூர்யா.   

Advertisement

Advertisement