• Apr 15 2026

டைட்டில் வின்னர் கானா வினோத்தா.? கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்த ஆதிரை.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. தினமும் புதிய திருப்பங்களும், மோதல்களும், உணர்ச்சிகளும் நிரம்பி வரும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தற்பொழுது, 61வது நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது. அதில் போட்டியாளர்கள் யார் டைட்டில் வின்னராக வரக்கூடும் என்பதைப் பற்றி கலந்துரையாடி உள்ளனர். 

ப்ரோமோவில், FJ போட்டியாளர்களிடம் “எந்த இரண்டு பேர் Final results moments-இல் நிற்கப்போகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இந்த கேள்விக்குப் போட்டியாளர் அரோராவும் கனியும் விக்கல்ஸ் விக்ரம் பெயரை தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் உள்ள சிலர் கானா வினோத் பெயரை முன்வைத்துள்ளனர். 

அதைக் கேட்ட ஆதிரை, “காமெடி பண்ணுறார் என்றதுக்காக இவர் டைட்டில் வின்னரா வருவதை.. என்னால்  ஏற்க முடியாது.!"  என்று கூறியுள்ளார். இதுதான் தற்பொழுது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement