திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரபல யூடுபே சேனலான பரிதாபங்கள் சேனலில் லட்டு பரிதாபங்கள் என்று ஒரு காமடி வீடியோ பதிவிடப்பட்டது. போட்டு சில நிமிடங்களில் அந்த வீடியோ சேனலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
லட்டு பரிதாபங்கள் என்று வெளியாகிய அந்த காணொளியில் லட்டுக்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது, பவன் கல்யாண் விரதம் இருந்தது போன்ற காட்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனாலே இந்த காணொளி வெளியிட்டு சிலமணி நேரங்களில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கிளம்பியதால் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இது தொடர்பாக பரிதாபங்கள்குழு கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி மனம் புண்பட்டிருந்தால் அதற்க்கு வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல வரும் காலங்களில் நடக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஹாஸ் டாக் பரிதாபங்கள் என்று குட்டி விடியோக்கள் நெட்டிசன்களினால் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இந்த காணொளி தற்போது வைரலாகிவருகிறது.
Listen News!