• Jan 15 2025

யூடியூப்பில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் "தொடாதே" பாடல் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழில் அறியக்கூடிய சொல்லிசை பாடகர்களில் சமூக கருத்தும் தீண்டாமைக்கு எதிரான கருத்துகளுடனும்  பாடல்களை வெளியிடும் 'தெருக்குரல்' அறிவு  தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் பாடகராக பணிபுரிந்துள்ளார்.'மாஸ்டர்' படத்தின் "வாத்தி இரைடு" பாடல் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.

track album 'Valliamma Peraandi Vol ...

சுயாதீன பாடல்கள் பலதை வெளியிட்டிருக்கும் அறிவு "எஞ்சாய் எஞ்சாமி" பாடல் மூலமாக உலக அளவில் பிரபல்யம் ஆனார்.தீண்டாமைக்கு எதிரான போராளியாய் நிற்கும் அறிவு தனது பாடல்கள் மூலம் தீண்டாமையின் கோர முகங்களையும் இன்றும் மக்கள் தேடும் விடுதலையையும் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

Valliamma Peraandi Vol 01 Audio Jukebox ...

அறிவின் "வள்ளியம்மா பேராண்டி" இசை ஆல்பத்தின் முதல் பாடலான 'தொடாதே' பாடல் நான்கு தினங்களுக்கு முன் சோனி மியூசிக் சவுத்தின் யூடியூப் தளத்தில் வெளியாகியிருந்தது.இந்நிலையில் குறித்த 'தொடாதே' பாடல் யூடியூப்பில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமான ஓர் ஆரம்பத்தை கொடுத்துள்ளது. 



Advertisement

Advertisement