விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பழைய போட்டியாளர்கள் வருகையால் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அத்தோடு தற்போது பணப்பெட்டிக்காக டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. முதல் பணப்பெட்டியை முத்து எடுத்து வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மீண்டும் பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 2 லட்சம் பணம் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. 25 வினாடிகள் தரப்பட்டுள்ளது. தூரம் 45 மீட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பணப்பெட்டியை எடுக்க ரயான் செல்கிறார். மற்ற போட்டியாளர்கள் அவருக்கு உற்சாகம் செய்கிறார்கள். மேலும் முத்து " மணி அடிக்க உங்க இங்க பார்க்காத நேர ஓடு பெட்டியை எடுத்தோன வேகமா வந்துரு எங்கையும் பார்க்காதா பெட்டி வீடு அவ்வளோதான்" என்று அறிவுரை சொல்கிறார்.
ரயான் தயாராகி மணி அடித்ததும் வேகமாக ஓடி சென்று 2 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு 17 செக்கனில் கதவு மூடுவதற்கு மணி அடிப்பதற்கும் முன் வந்து விடுகிறார். போட்டியாளர்கள் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் முத்து ரயான் ஆகியோருக்கு பணமும் சொந்தம் போட்டியிலும் இருக்கலாம். இனி அடுத்த போட்டியாளர்களுக்கு எவ்வளவு தொகை வர போகிறது. யார் வெளியேற போகிறா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!