பிரபல நடிகை திர்ஷா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது புகைப்படங்கள் ஷேர் செய்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய திர்ஷா நாங்கள் என்று கூறி ஒரு புகைப்படம் ஒன்றை தற்போது ஷேர் செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
நடிகை திர்ஷா தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அத்தோடு ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 44 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தது வருகிறார். இந்நிலையில் பிரபலங்கள் தாங்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நடிகை திர்ஷாவும் பகிர்ந்துள்ளார்.
திர்ஷா பகிர்ந்த ஸ்டோரியில் தனது 3 செல்ல நாய்களுடன் பொங்கல் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படத்தினையே ஷேர் செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் திர்ஷாவின் வளர்ப்பு நாய் இறந்ததை சோகமாக பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தனது குட்டி நாய்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
Listen News!