• Feb 02 2023

இந்த கர்மா வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும்- நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகின்றாரா?- முக்கிய பிரபலம் போட்ட டுவிட்

Listen News!
stella / 1 week ago
image

Advertisement

Listen News!

விஜய்யின் 66வது படமான 'வாரிசு' இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து 250 கோடி வசூலையும் கடந்துவிட்டது. அப்படம் வெளியான உடனேயே விஜய்யின் 67வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் இணையும் படம். அப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. அதனால், லோகேஷ், விஜய் மீண்டும் இணையும் விஜய் 67 படம் அந்த அளவுக்கு வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


இது ஒரு புறம் இருக்க விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வைரலாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது.இந்த நிலையில் விநியோகஸ்தர் கோபி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள்,, இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement