• Sep 19 2024

வாரிசு திரைப்படத்தின் கதை இது தானா-மொத்தமாக வெளியானால் எதைத்தான் பார்க்கிறது-குமுறும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது.

அத்தோடு ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட விஜய் ஹைதராபாத்தில் ஒரு படத்தை பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் Synposis குறித்த தகவல் இணையத்தில் புகைப்படத்துடன் பரவி வருகிறது. 

அதில் தெரிவித்துள்ளதாவது “விஜய் ராஜேந்திரன் ஒரு மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலியாக வாழ்ந்து வருகிறார். அவரின் வளர்ப்பு தந்தை இறக்கும் போது நிலைமை மாறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.



இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஆனால் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இவ்வாறு இருக்கையில் இப் படம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என மாறி மாறி வெளியாவதால் இப்படத்தில் எதைத்தான் பார்க்கிறது என ரசிகர்கள் புலம்பிறார்களாம்.  




Advertisement

Advertisement