• Sep 20 2024

உடல் எடையைக் குறைத்ததற்கு இதுதான் காரணம் - உண்மையை உடைத்த லாஸ்லியா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுக படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.கூகுள் குட்டப்பா திரைப்படம் ஜூன் 3-ம் தேதி, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை அடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்வீகா ஷோரூமில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அத்தோடு ஆஹா தமிழ் ஓடிடி தளம் பூர்விகா உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. பூர்விகாவில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. அதன்படி கூகுள் குட்டப்பா செய்தியாளர் சந்திப்பு கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா ஷோரூமில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், நடிகை லாஸ்லியா என பலரும் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ’இயக்குநர்கள் பணி என்பது கடினமான பணி தான். நான் நடிப்பதை மிகவும் ரசித்தே நடித்தேன். நேற்று என்னுடைய பிறந்த நாள் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் எனக்கு வாழ்த்து சொன்னார். எங்களுடைய நட்பு அது போன்றது’ என்று குறிப்பிட்டார்.

எல்லா நடிகைகள் மீதும் எனக்கு கிரஷ் உள்ளது என்றார் தர்ஷன். பின்னர் பேசிய லாஸ்லியா, எனக்கு கொஞ்சம் உடல்நலப் பிரச்னை இருந்தது. திரையில் பார்க்கும் போது உடல் எடையை குறைக்க வேண்டும் போல இருந்தது அதனால் தான் உடல் எடையை குறைத்தேன் என்று குறிப்பிட்டார்.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement