• May 20 2024

இது நாங்க கட்டி வரும் பங்களா... முதன் முறையாக வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கான  ஒரு இடத்தை இன்றுவரை எல்லோரையும் சிரிக்க வைப்பவர்  தான்  அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியுமென்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு தனக்கான இடத்தை பிடித்து பிரபலமானார்.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்தின் மூலம்  வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். 

அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது என்று தான் கூற வேண்டும்.பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். அத்தோடு , இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர்.எனினும்  அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எனினும் தற்போது நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து வருகிறார். இதே நிகழ்ச்சியில் அர்ச்சனா நடுவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிஷா வீடு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுவும் தனியார் சேனல் ஒன்று நிஷா ஒரு பிராம்மாண்ட பங்களாவை வாங்கி இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தது.

மேலும்  இந்த செய்தியை கண்டு பலர் நிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் நிஷாவை கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த நிஷா ‘அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க.

இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்….. சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ’ என்றுபதிவிட்டு இருந்தார். இவ்வாறுஇருக்கையில்  அந்த யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிஷா, தான் கட்டும் புதிய வீட்டினை காட்டியுள்ளார், அதில் பலரும் வந்து இந்த மூஞ்சு எங்க பங்களா வீடு கட்ட போகிறது என்று கேட்டார்கள்,அது மிகவும் கஷ்டமாக இருந்தது.ஆனால் நிஷாவிடம் பலரும் நீ எல்லாம் எங்கபோய் சொந்த வீடு கட்ட போற என்று கூறினார்கள், அதை மனதில் வைத்து தான் சொந்த வீடு கட்டியே ஆகணும் என்று கட்டி வருகிறார் நிஷா.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மென்மேலும் வளருவீர்கள் என கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்












Advertisement

Advertisement