• May 09 2024

எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்..முன்னணி நடிகரை கலாய்த்த ஜெயம் ரவி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தரமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக  வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என காதல் படங்களாக நடித்து வெற்றி கண்டார்

அதையடுத்து பேராண்மை, ஆதி பகவான், தனி ஒருவன் என  பல படங்களில் ஆக்ஷன் நடிகராக  அவதாரம் எடுத்தார். இவ்வாறுஇருக்கையில் சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை

எனவே மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மிகவும் நம்பியிருந்தார்.அத்தோடு அவர் நம்பிக்கை வீண் போகவில்லை என்றுதான் கூற வேண்டும். அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்று வருகின்றார் ஜெயம் ரவி.

இவ்வாறுஇருக்கையில் பொன்னியின் செல்வன் நடிகர்கள் பங்கேற்ற ஒரு பேட்டியில் ஜெயம் ரவி ஒரு முன்னணி நடிகரை  கிண்டல் செய்ததாக விக்ரம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, ஒருமுறை ஜெயம் ரவி என்னிடம் வந்து ஒரு நடிகரைப் பற்றி பேசினார்.

அப்போது யாருங்க அந்த ஹீரோ அம்மா செத்துப்போனாலும் ஒரே எக்ஸ்பிரஷன்,காதலிக்கு பூ கொடுக்கும்போதும் ஒரே எக்ஸ்பிரஷன் என கூறினார். அதன் பிறகு நான், அவர் என் நண்பன் என்று கூறுனேன்.

அப்போதும் ஜெயம் ரவி நிறுத்தாமல் அந்த நடிகரை கிண்டல் செய்து வந்தார் என விக்ரம் தெரிவித்துள்ளார். இவ்வாறுஇருக்கையில் அந்த நடிகரை யார் என ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement