• Apr 27 2024

இதுதான் என்னோட வருத்தம்... தொப்பி அணிந்து வந்து பீல் பண்ணிய கமல்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி போட்டியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி செம கெத்தாக விளையாடி வந்தார்கள்.

21போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15பேர் மட்டுமே உள்ளார்கள். வார இறுதி வந்துவிட்டாலே கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அந்தவகையில் தற்போது இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் கமல் என்றுமே இல்லாதவாறு தொப்பி அணிந்து வந்து "யாரெல்லாம் இந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என்று சொல்லுறீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே அசீம் எழுந்து "மணி அன்ட் மைனா" எனக் கூறுகின்றார்.

அதற்கு உடனே மறுப்புத் தெரிவிக்கும் வகையில் எழுந்த மைனா "ஏதோ தெரியாமல் சும்மா பார்வையில பார்த்துப் பேசாதீங்க, பிளே வேற பிரண்ட்ஷிப் என்பது வேற, அப்படி ஏதாவது உனக்கு இருந்தால் வச்சுக்கோ" எனக் கமலின் முன்னாடியே அதட்டிக் கூறுகின்றார். 

இதற்கு கமல் "ஆக மொத்தத்தில் குரூப்பிஸம் இருக்கு என்பது தான் ஊர்ஜிதமாகிறது" எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது "இந்த 50ஆவது நாளிலேயும் விளையாட்டை ஆரம்பியுங்க என்று சொல்றதுதான் என்னுடைய வருத்தம்" என ரொம்பவே பீல் பண்ணிக் கூறுகின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement