• Apr 26 2024

இது தான் கேஃம் இப்படித் தான் நடக்கும்- முதன் முறையாக தனலக்ஷ்மியை எதிர்த்துப் பேசிய கதிரவன்- சிங்கம் களத்தில இறங்கிடுச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும், அந்த வகையில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் கண்ணா லட்டு திண்ண ஆசையா மற்றும் அட தேனடை என்கிற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர்.

இதில் பலருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. குறிப்பாக இந்த வாரம் நடந்த அனைத்து மோதல்களிலும் அமுதவாணன் மற்றும் தனலக்ஷ்மி ஆகியோரின் பெயர்கள் அதிகளவில் இருந்தன. இன்று வெளியான முதல் புரோமோவில் கூட போட்டியின் போது மணிகண்டன் தன்னை அடித்துவிட்டதாக அமுதவாணன் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.


மேலும் இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து தனலக்ஷ்மி எதிர் டீம் என்ன செய்தாலும் அதை குற்றம் என்றே கூறி வருகின்றார். அதன்படி அமுதவாணன் ஸ்சுவிட் பாக்ஸை எடுத்து தனலக்ஷ்மியிடம் கொடுக்கின்றார்.தனலக்ஷ்மி குயின்சியிடம் கொடுக்கும் போது அதை கதிரவன் வாங்கி தன்னுடைய டீமுக்கு கொடுத்து விட்டார்.

இதனால் அமுதவாணன் திட்ட கடுப்பான தனலக்ஷ்மி கதிரைப் பார்த்து என்னை தங்கச்சி என்று சொல்லாதீங்க ரொம்ப நடிக்காதீங்க  நீங்க பண்ணின மாதிரி நானும் பண்ணுவேன். அடிச்சுப் பிடிச்சு வாங்குவேன் என்று கூறுகின்றார். இதனால் கதிரவன் இது தான் கேஃம் என்று கூறும் போதும் அதனைப் பொருட்படுத்தாது தான் சொல்வது தான் சரியென பேசுகின்றார். இந்த சம்பவம் பார்வையாளர்களை கடுப்படையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement