• Sep 21 2024

நான் இப்படித் தான் கல்யாணம் பண்ணுவேன் -நடிகை ஸ்ரீ திவ்யாவின் காதலன் யார் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் கிடைத்த வெற்நியைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில்  உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

மேலும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ திவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் தற்போது நடித்துள்ள ரெய்டு என்கிற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 


இந்நிலையில், ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார். இதில் தொகுப்பாளர் உங்களுக்கு காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்ப... எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான், என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் உங்கள் காதலர் யார் என கேள்வி எழுப்பி வரும் நிலையில், விரைவில் தன்னுடைய திருமண செய்தியுடன்... காதலன் யார் என்பதை ஸ்ரீதிவ்யா அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement