• Jan 15 2025

கல்யாண தினத்தை கொண்டாடவுள்ள விஜய்- சங்கீதா... அட திருமண அழைப்பிதழா இது? வைரல் போட்டோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

திரையுலகின் ஸ்டார் தளபதி விஜய் அவர்கள் சில மாதங்களுக்கு முன்  69வது படத்துடன் இனி படங்கள் நடிக்கப்போவதில்லை என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். தற்போது அவர் நடித்துள்ள 68வது படமான கோட் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவரின் திருமண அழைப்பிதழ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம்வருகிறது.


நடிகர் விஜய் தனது ரசிகையான லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் ஷாலினி என மகன், மகள் உள்ளனர்.  விஜய்யின் மகன் நடிகராக இல்லாமல் தனது தாத்தாவை போல இயக்குனர் அவதாரம் எடுத்து சினிமாவில் நுழைய இருக்கிறார்.


அவரின் முதல் படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் விஜய்யின் கோட் பட டிரைலர் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகிறது. நடிகர் விஜய்-சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழைப்பிதழ் புகைப்படம்... 


Advertisement

Advertisement