பிரபல நடிகை சன்னி லியோன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக பெற்றுக்கொண்ட நபரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கணக்கில் சன்னி லியோனின் கணவர், ஜானி சின்ஸ் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் பெயரில் போலி வங்கி கணக்கு ஆரம்பித்து அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் 1000 ரூபாய் பணம் பெற்றுகொண்டுள்ளார். இவ்வாறு இருக்கையிலே இந்த திட்டத்தினை பயன்படுத்து பலர் மோசடியாக பணம் பெற்றுக்கொண்டு வந்தநிலையில் சன்னி லியோன் பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் குறித்து தெரிய வந்துள்ளது.
அதில், அவரது கணவர் பெயர் ‘ஜானி சின்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. மேலும், இத்திட்டத்தில் கீழ் இதுவரை வழங்கிய தொகையைத் திரும்பப் பெற முடியாது என்பதால், இதில் மோசடி செய்யும் நபர்கள் மீதான குற்றச்சாட்டின் பேரில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Listen News!