சின்னத்திரை உலகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, படிப்படியாக வளர்ந்து வரும் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, மீண்டும் ஒரு முறை தனது தனித்துவத்தையும், மனிதநேயத்தையும் நிரூபித்துள்ளார்.
தற்போது KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் “காந்தி கண்ணடி” படத்தின் இசை வெளியீட்டு விழா மிகுந்த விமர்சனங்களுடன் நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வினை தொகுத்து வழங்கிய மணிமேகலை, இதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மணிமேகலை தொலைக்காட்சி உலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர். அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை உணர்வு மற்றும் நேர்த்தியான அணுகுமுறை மூலம் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் இடம்பிடித்தார்.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கப்படும் நிலையில், தற்போது பல முக்கிய ஈவென்ட்களில் ‘பிரபல ஹோஸ்ட்’ என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், நகைச்சுவை கலந்த நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான ஸ்டைலால் பெயர் பெற்றவர் KPY பாலா. தற்போது அவரே ஹீரோவாக அறிமுகமாகும் படம் தான் காந்தி கண்ணடி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நகரில் சமீபத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி 6 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததென்பதை பலரும் அறியவில்லை. ஆனால், அதற்கு மணிமேகலை ஒரு ரூபா கூட வாங்காமல் நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் என பாலா கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
Listen News!