பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியவர்தான் நடிகை சந்தினி பிரகாஷ்.
தொடர்ந்து ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் நடிகையா என்ட்ரி கொடுத்து சரவணன் மீனாட்சி, பிரியமானவள், பூவே பூச்சுடவா போன்ற பல ஹிட் சீரியல்களில் இவர் நடித்து தற்போது திரைப் பிரபலமாயிருக்கிறார்.
மேலும் நடிகை சந்தனி பிரகாஷ், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சந்தினி பிரகாஷ்க்கு கூட ஜோடியாக வந்தவர்தான் 'ஏங்க' என்ற ஒற்றை சொல்லில் கூமாபட்டியை உலகறியச் செய்த அந்த ஹீரோவான குமாபட்டி தங்கபாண்டி.
இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமான தங்கபாண்டி இப்போது இந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் சந்தினி பிரகாஷ் உடன் ஜோடி சேர்ந்துள்ளமை குறித்த நிகழ்ச்சியை மேலும் ரசிக்க வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரீகிரியேட் பண்ணக்கூடிய பாடல் சுற்றில் தங்கபாண்டி மற்றும் சந்தனி பிரகாஷ் சூரியவம்சம் படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடி அசத்திருந்தார்கள்.
அதிலும் ஒரு கட்டத்துல சந்தனி கூட ரொம்பவே நெருக்கமா ஆடிருப்பார் தங்கபாண்டி. அது சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலாகியது.
ஆனால் அதே சமயத்தில் இந்த எபிசோடு பார்த்த சிலர் தங்கபாண்டி ஒரு கோமாளி எனவும் இந்த கோமாளிக்கு வந்த வாழ்வைப் பாரு என்றவாறு பல்வேறு படுமோசமான கொமண்ஸ்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூமாபட்டி தங்கபாண்டி பற்றி சாந்தனி பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
திறமை எங்க இருந்தாலும் அதனை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவரை நிறைய பேர் கோமாளி அப்படின்னு நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர் கோமாளி கிடையாது. அவர் ஒரு ஹீரோ. அவர் மாதிரி யாரும் வர முடியாது.
அவர் என்கூட நெருக்கமான டான்ஸ் ஆடியதை பார்த்து சில பேர் அவரைப் பற்றி தப்பா பேசினாங்க. ஆனால் அவர் ரொம்ப நல்லவர். அவருக்கு என்கூட அப்படியே ஆட விருப்பமில்லை.
நான்தான் இதில் இப்படி தான் இருக்கணும் அப்படின்னு சொல்லி ஆடவைத்தேன்.
அவருக்கிட்ட பல நல்ல குணங்கள் இருக்கு. குறிப்பாக அவர் பெண்களுக்கிட்ட ரொம்பவே அன்பான நடந்து கொள்கிறார். யாரும் அவர் பற்றி தப்பாக பேசாதீங்க எனவும் கூறியிருக்கிறார் சந்தனி பிரகாஷ்.
Listen News!