சின்னத்திரையில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் குமரன் தங்கராஜன். இந்த சீரியளுக்கு பின் இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.
இதை தொடர்ந்து குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் குமாரசம்பவம் என்ற படம் ரிலீஸுக்கும் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் குமாரன் தங்கராஜுடன், பாயல் இராதாகிருஷ்ணன், பால சரவணன், வினோத், சாகர் வினோத், முன்னா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான பாலாஜி வேணுகோபால் இயற்றியுள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்ற 'இது தேவதை நேரமே நிறம் மாறுதே வானமே' என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை பாலாஜி வேலு கோபால் எழுத, பாடகர் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகர் குமரன் தங்கராஜன் தனது இன்ஸ்டா பதிவில் செப்டம்பர் 12ஆம் தேதி பெரிய ஸ்கிரீனில் உங்களை காண தயாராக இருக்கின்றேன். உங்களுடைய ஆசிர்வாதமும் அன்பும் வேண்டும் என படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்ஸ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது குமாரவேலின் இந்த படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!