• Mar 09 2026

BB7 டைட்டில் வின்னர் இவங்க தான்.. யாரென்று தெரிகிறதா? இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 80 நாட்களைக்  கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7. 

இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 


மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.

குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. மேலும், லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில்,  பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வரும் மாயா தான் டைட்டில் வின்னர் என அவரின் சிறுவயது புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் தற்போது பிரிஸ் டாஸ்கில், மாயாவின் அம்மா மற்றும் சகோதரி அவரை பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement