• Oct 27 2026

சாதனைகளை அடித்து நொறுக்கிய ரஜினி... ‘ஜெயிலர் 2’ வசூலில் பிரமாண்ட சாதனை.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் சாதனைகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. படம் வெளியான 11 நாட்களிலேயே உலகளவில் ரூ.710.35 கோடி வசூலித்து, தமிழ் திரையுலகில் இதுவரை நிலவி வந்த முக்கியமான வசூல் சாதனையை முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து உருவான இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வெளியான நாளிலிருந்து திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வசூலிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படம் உலகளவில் ரூ.691 கோடி வசூலித்திருந்தது. தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 11 நாட்களில் ரூ.710.35 கோடியை எட்டியதன் மூலம், அந்தச் சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இதன் மூலம், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றிலும் ‘ஜெயிலர் 2’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இன்னும் எத்தனை கோடிகளை இந்தத் திரைப்படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் புதிய மைல்கற்களை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement