பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10ஆவது சீசன் தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அடுத்தடுத்து கடுமையான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருவதுடன், பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ஐந்தாவது வார இறுதியில் சாந்தினி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் போட்டியாளர் ராகவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வெளியேற்றங்கள் ஒருபுறமிருக்க, டிடிஎஃப் வாசன் டைமண்டை மறைத்து வைத்து விளையாடிய சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த வாரத்திற்கான Survival Battle டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காகப் போட்டியாளர்கள் ப்ளூ டீம் மற்றும் ரெட் டீம் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது, போட்டியாளர்களுக்கு இடையில் என்னென்ன மோதல்கள் உருவாகப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த காலம் முதல் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார். இவரது தொகுப்பிலும் நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் தற்போது இந்த வாரம் நிகழ்ச்சிக்கு தொண்டை வலி காரணமாக வரப்போவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதில் இந்த வாரம் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!