• May 20 2024

தளபதி 67 படத்தின் ஆறு வில்லன்கள் இவர்கள் தானா -பட்டையைகிளப்பும் படத்தின் சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விஜய். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இவர் 'வாரிசு' படத்தினைத் தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-ஆவது  படத்தை நடிக்கவுள்ளார்.இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் என்று தகவல் வெளியானது.

அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

அத்தோடு நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருகிறார்களாம்.


இந்நிலையில், தளபதி 67 படத்தின் ஆறாவது வில்லனாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா நடிக்கப்போவதாக திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


அத்தோடு இப் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்த பிறகு, படத்தில் கமிட்டாகியுள்ள நட்சத்திரங்கள் யார்யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement