• Jan 19 2025

ஜெயம் ரவி பேசின அளவுக்கு ஒன்னுமே இல்ல.. சலிப்பா இருக்குது! பரிதாபத்தில் பிரதர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற காதல் படத்தில் தனது வெற்றியை நிலை நாட்டிய ஜெயம் ரவி, அதன் பின்பு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்ரமணியம், தீபாவளி, பேராண்மை போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இவருடைய குடும்பம் மிகப்பெரிய கலை குடும்பமாக காணப்படுகின்றது. இவருடைய அண்ணனும் ஒரு இயக்குனர் ஆவார்.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் தான் பிரதர். இந்த படம் இன்றைய தினம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.


மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, சீதா, வி டிவி கணேஷ், பிரபல தெலுங்கு நடிகரான ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள் இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிரதர் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த படத்திற்கு ஏன் தான் வந்தோம் என்று இருக்குது என்று தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும் அமரன் படத்திற்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் பிரதர் படத்திற்கு வந்தோம். 

ஆனால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு கதையே இல்லை காமெடியும் இல்லை பார்க்கவே சலிப்பாக இருந்தது என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Advertisement

Advertisement