தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்த படியாக ஒரு மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்த ராயன் படம் குறித்தும் இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ஒரு நடிகர் இயக்குனராக மாறி இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். பல படத்தில் நடித்த சிவாஜியால் கூட இயக்குனராக முடியவில்லை. இவர் இயக்குனர் ஆனதில் மகிழ்ச்சி. ஆனால் அவர் படத்தில் அளவிற்கு மீறிய வன்முறையை காட்சி உள்ளது. அப்படி வன்முறை இருந்தால் தான் மாஸ் படம் ஓடிவிடும் என்று நினைக்கின்றார்கள். தற்போது பல இடத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றது. அதற்கு காரணம் நாம் பார்க்கும் சினிமாவில் வன்முறை காட்சிகள் தான். அதுவே மனதிற்குள் ஒரு வன்மம் வர காரணமாகி விடுகின்றது.
ஏற்கனவே வெளியில் யாரும் நடமாட முடியவில்லை. பெரிய பெரிய தலைவர்களே பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் சினிமாக்காரங்க தான். சினிமா வன்முறையை தூண்டுகின்றது. சாதியை தூண்டுகின்றது. ராயன் படமும் சைக்கோ தனமாக இருப்பதாக இணையத்தில் பார்த்தேன்.. இதுபோன்ற வன்முறை தூண்டும் படம் எனக்கு பிடிக்காது என்பதால் நான் அதை பார்க்கவில்லை.
தனுஷ் போன்ற திறமையானவர்கள் எம்ஜிஆர் போன்றவர்களை ரோல் மாடலாக வைத்து படமெடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குடியாலும் வன்முறையாளாலும் நாடு மோசமாக உள்ளது. அதையே நாமும் படத்தில் சொல்லக்கூடாது.
மேலும் தயாரிப்பாளர் சங்கம் விஷால், தனுசுக்கு கொடுத்த ரெட் காட்டு பற்றி பேசுகையில், இதெல்லாம் ஒரு விஷயம் கிடையாது. இப்படி ஒரு புகார் வரும்போது நடிகர் சங்கத்தை அழைத்து பேசியிருக்க வேண்டும். சினிமா நடிகர்களை நம்பி இருக்கும்போது அவர்களுடன் நட்பாக பழகாமல் அவர்களிடம் சண்டை போடுவதால் எப்படி சரியாகும்.
தயாரிப்பாளர் சங்கம் சொல்வது போல வேலை நிறுத்தமும் நடக்காது. அதற்கு காரணம் நடப்பு சங்கம் என்று ஒரு குரூப் இருக்கின்றது. இது இந்த குரூப்பை காலி பண்ண பார்க்கின்றது. இந்த இரண்டு குரூப்பும் காலி செய்ய சேம்பர் என்கின்ற குரூப் ஒன்று வேலை செய்கின்றது. இப்படி சங்கத்திற்குள்ளயே பல குளறுபடிகள் உள்ளன. முடிந்தால் தனுஷ் மீது கை வைத்து பார்க்கட்டும் என பேசி உள்ளார்.
Listen News!