• Jun 14 2026

காத்திருந்தது போதும்.. பிரதீப் ரங்கநாதனின் 'LIK' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால், இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்தது. இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இப்படத்தின் மூன்றாவது பாடலான “அடாவடி” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல், நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களம் இணைந்த இந்த படம், வெளியாகும் நாளில் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement