• Sep 10 2024

இயக்குனரின் பிறந்தநாளில் "கங்குவா" படக்குழு வெளியிட்டிருக்கும் வீடியோ !

Thisnugan / 4 weeks ago

Advertisement

Listen News!

உலக அளவில் தமிழ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் "கங்குவா".சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப் படத்தின் சின்ன சின்ன அப்டேட்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன.

Kanguva 2024 - Tamilgun

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் படத்தின் இயக்குனர் சிவாவிற்கு "கங்குவா" படக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.சிவாவின் தமிழ் அறிமுக திரைப்படமான "சிறுத்தை"யில்   தொடங்கி கங்குவா படம் வரையான ஒரு லூப் வீடியோவை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது "கங்குவா" படக்குழு.

Siva (director) - Wikipedia

2011ஆம் ஆண்டு "சிறுத்தை" படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குனராக தம்பதித்த சிவா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து தமிழின் முன்னணி வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.அஜித்துடன் "வீரம்", "வேதாளம்", "விஸ்வாசம்", "விவேகம்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த சிவா சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த படத்தில் இணைத்தார் எனபது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement