• Jan 19 2025

அசுர வேகத்தில் பல மில்லியன்களை கடந்த சூரியின் கொட்டுக்காளி டிரைலர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவர் நடித்த ஒரே ஒரு படத்தின் மூலம் வெற்றி நாயகனாக உருவெடுத்தார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதற்குப் பிறகு விடுதலை சூரி என்று தான் இவர் அழைக்கப்பட்டார்.

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடியனாக  அறிமுகமான சூரி. அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியில் மிகவும் ஃபேமஸானார். அதற்குப் பிறகு பரோட்டா சூரி என்று தான் அழைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது விடுதலை படத்திற்கு பிறகு அவர் முற்றிலுமாக மாறுபட்டு எல்லாரும் பாராட்டத்தக்க நாயகனாக வலம் வருகின்றார். அதிலும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கருடன் திரைப்படம் இவரை இன்னொரு படி மேலே கொண்டு சென்றது.


இன்றைய தினம் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி  படத்தின் டெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.   இதன்போது சிவகார்த்திகேயன் பல சுவாரசியமான விஷயங்களையும் மேடையில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான கொட்டுக்காளி படத்தின் டெய்லர் 3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா  படத்தின் டெய்லரும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வியூக்களை பெற்றிருந்தது. தற்போது சூரியின் கொட்டுக்காளி  திரைப்படம் அதையும் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement