• Sep 19 2024

லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத்தது தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.


ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.


இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.அந்த படத்திற்கு ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 


சமுத்திரக்கனி, அபிராமில், மிஷ்கின், ஆடுகளம், நரேன் ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்பட பல பகுதிகளில் நடைபெற்றது. இது குழந்தைகள் பற்றிய படம் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசும் படம் என்றும் முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement