• May 19 2024

கார்த்தியின் 25வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 கார்த்தியின் நடிப்பில் இந்தாண்டு வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.எனினுமஇதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 25வது படமான ஜப்பான் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில், ஜப்பான் திரைப்படத்தின் அட்டகாசமான முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.அத்தோடு கோலிவுட்டில் இந்தாண்டு வின்னிங் ஸ்டார் என்றால் அது கார்த்தி தான். விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளன. மேலும் இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக வெளியானது. அத்தோடு பாக்ஸ் ஆபிஸிலும் பொன்னியின் செல்வன் 500 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது. அதேபோல், தீபாவளிக்கு ரிலீஸான கார்த்தியின் சர்தார் படமும் பத்தே நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் ஒரே ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான 3 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால், அவரது அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதன்படி கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள 'ஜப்பான்' அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், தற்போது ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக உருவாகியுள்ளது. சோஃபா ஒன்றில் கார்த்தி மயங்கிய நிலையில் படுத்திருக்கிறார். மேலும் அவருக்கு பின்னால் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தில் தங்க நிற ஆடையில் கையில் துப்பாக்கியுடன் சுருட்டை முடி என வித்தியாசமான லுக்கில் இன்னொரு கார்த்தி இருக்கிறார். ரெட்ரோ லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் செம்ம கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ளது. ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் ஜானரில் இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



அத்தோடு ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகிறது. ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால், தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளிலும் ஜப்பான் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிடுமென உறுதியாக நம்பலாம். கேஜிஎஃப் படத்தை தமிழில் வெளியிட்டது ட்ரீம் வாரியர்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஇருக்கையில், தற்போது வெளியான ஜப்பான் முதல் தோற்றத்தை கார்த்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement