• Apr 18 2024

நடிகை நயன்தாராவின் புதிய படம் பற்றி வெளியான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என டாப் நடிகர்களுடன் கலக்கி வருகிறார் நயன்தாரா. பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா , ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


மேலும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.இதனைத் தொடர்ந்து கோல்டு, கனெக்ட், இறைவன், லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. இவ்வாறுஇருக்கையில்  நடிகை நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி அறிமுக இயக்குநர் சசிகாந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. மேலும் இந்தப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் மூலம் மாதவனுடன் முதல் முறையாக இணைகிறார் நயன்தாரா.



சித்தார்த் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தியில் பிரபலமாக உள்ள நடிகர் மாதவன், ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement