• Sep 19 2024

தமிழ் ராக்கர்ஸில் படத்தை லீக் செய்த நபர்களுக்கு நேர்ந்த கதி-விசாரனையில் தெரிய வந்த திடுக்கிடும் உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


காதலை மையமாகக் கொண்ட ‘லால் சிங் சத்தா’ என்னும் இந்தி திரைப்படம் கடந்த 11–ந்தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் திருட்டுத்தனாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து வயாகாம்18 நிறுவனம் பெங்களூரிலுள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்த புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அத்தோடு பெங்களூரில் உள்ள சினிபோலிஸ், ஓரியண்ட் மாலில் இருந்து வயாகாம்18  நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். 

விசாரணையின் போது இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இதுபோன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


மேலும் இது போன்று படங்களை சட்டவிரோதமாக இணைதளங்களில் வெளியிடுவதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கியை அளித்துள்ளது. 

அத்தோடு இது இணையத்தில் திருட்டு படங்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும். மேலும் இது திரைப்படத்துறைக்கு பெரிய நிம்மதியைத் தருகிறது. இந்த கைது என்பது இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் வெளிக்கொண்டு வர உதவுவதோடு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்கவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement