• May 19 2024

பிரபல நகைக் கடை ப்ரமோஷனில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா- வாஃவ் எவ்வளவு கியூட்டாக இருக்கிறீங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ரேஷ்மா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இனனும் சில படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.


தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தனது திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சினைகள் போன்றவற்றை வெளிப்படையாகப் பேசி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். 


இதனை அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திருப்பதோடு அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் இவர் பிரபல நகைக்கடையான சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையின் திறப்பு விழாவிற்கு விருந்தினராகச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வாவ் கியூட்டாக இருக்கிறீங்களே எனக் கூறி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement