• Sep 19 2024

தங்க பதக்கத்தை தட்டி தூக்கிய குட்டி தல அஜித்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தன்னுடைய கெத்தை காட்டி வருகிறார். அந்த வகைளில் அவரின் மகனும் தந்தையை போலவே சாதனையாளராக மாறி இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறரது.

நடிகர் அஜித் அவர்களின் பைக் ரேஸ் ஆர்வம் பற்றி அனைவருக்கும் தெரியும் அத்துடன் சேர்த்து துப்பாக்கி சுடுதல், ட்ரோன் விமானம் உருவாக்கியது என இவருக்கு இருக்கும் திறமைகளை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இவரைப் போன்று அவருடைய வாரிசும் விளையாட்டு துறையில் சாதனையாளராக இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

அஜித்தின் மகன் ஆத்விக் கால் பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இது பற்றி ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கிராஸ் ரூட் அகாடமி நடத்திய போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தை வென்றமையொட்டி பல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. 

மேலும் அந்தப் போட்டியில்  அவர் விளையாடியது, தன் அம்மா ஷாலினியுடன் இருப்பது, மெடலை பிடித்தபடி கெத்தாக போஸ் கொடுப்பது என அவருடைய போட்டோக்கள் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement