• Oct 13 2024

குக் வித் கோமாளியின் புகழின் பேச்சை கேட்க மறுத்த ஷாலினி ஜோயா! குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமானவர்தான் நடிகை ஷாலினி ஜோயா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஷாலினி ஜோயா பங்கு பற்றியதிலிருந்து பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்த வாறே உள்ளன. அதற்கு காரணம் அவர் தமிழில் சரளமாக பேசத் தெரியாமை தான்.

இதன் காரணத்தினால் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் மரியாதை இன்றி பேசுவதாகவும் அதிலும் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரை மரியாதை இன்றி பேசுவதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


இறுதியாக நடந்த எபிசோடில் தாமுவை உனக்கு என்ன பைத்தியமாடா என்று கேட்டிருப்பார். அது போலவே மாதம்பட்டி ரங்கராஜையும் தர குறைவாக பேச அங்கிருந்த புகழ் அப்படி பேசக்கூடாது என்று அவரை சரி செய்யவும் அவர் மீண்டும் அதேதான் செய்கின்றார். இது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு பக்கம் ஷாலினி ஜோயா பண்ணுவது எல்லாமே சூப்பர் தான்.  அவங்க நல்லா குக் பண்ணுறாங்க. அவங்க பேசுறதும் க்யூட்டா இருக்குது. அவங்களுக்காகத்தான் நாங்க குக் வித் கோமாளியே பார்க்கிறோம் என இன்னும் சில அவருக்கு சப்போர்ட் ஆக பேசுகின்றார்கள்.




Advertisement