• Sep 20 2024

நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் "வாழை" படத்தின் புதிய அப்டேட் !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ்  சமூகத்தின் நிழல்களாய் தொடரும் அதிகார வர்க்கத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அடுத்தடுத்த படங்களையும் கொடுத்தார்.

Vaazhai - IMDb

"கர்ணன்","மாமன்னன்" என தொடர் வெற்றி படங்களை கொடுத்திருக்கும் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான "வாழை" திரைப்படதின் படப்பிடிப்பு வேலைகள் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.சிறுவர்களை மையப்படுத்திய கதையென எதிர்பார்க்கப்பட்ட இப் படத்தின் கதை ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதென செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று நாளை வெளியாவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது நாளை "வாழை" படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக ஆபிஸியல்  செய்திகள் வெளியாகியுள்ளது.படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் வழங்குவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement