• Jan 19 2025

இன்னும் 12 நிமிஷம் கட் பண்ணியாச்சு... நாளைக்கு புது வெர்ஷன்ல் பாருங்க... லைகா அதிரடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் உடன் சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

லைக்கா நிறுவனத்தின் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவானதோடு, இதற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ஆனாலும் இந்த திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆனபோதும் இன்னும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதுவரை 65 கோடி என்று தான் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை அடுத்த மாதமே ஒடிடியில் வெளியிடுவதற்கு படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தில் மேலும் 12 நிமிடங்கள் கட் செய்து இருப்பதாகவும், இந்த புது வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 20 நிமிடங்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 12 நிமிடங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement