• Jan 19 2025

வாடா, போடா என மனோஜை வெளுத்து வாங்கிய முத்து பொண்டாட்டி! எத்தின நாள் பகையோ..? ஷாக் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதாவது கதைக்களத்தில் விறுவிறுப்பு ஏற்பட ரசிகர்களும் தொடருக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள். அதிலும் இந்த சீரியலின் ஜோடிக்கு மக்கள் நல்ல ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்கின்றது. அதில் ரோகிணிக்கும் தாலி பிரித்து கோர்ப்பதற்கு விஜயா ஏற்பாடு செய்து, அதற்கு ரோகிணியின் அப்பா கட்டாயமாக வரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்.


இதன் காரணமாக முத்துவை வைத்து இந்த பங்க்ஷனில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காக ரோகிணி ஒரு பக்கமும், விஜயா குடும்பத்திலிருந்து ஸ்ருதியை பிரிப்பதற்காக ஸ்ருதியின் பெற்றோர் இன்னொரு பக்கமும் முத்துவை சீண்டி வருகிறார்கள்.


அவர்கள் போட்ட திட்டத்தின் படி,  ரோகிணி அனுப்பிய ஆளும், ஸ்ருதியின் அம்மா அனுப்பிய ஆட்களும் முத்துவிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள். ஆனால் அவர் எல்லாத்திற்கும் அமைதியாக இருக்கிறார். அதைப்போலவே அண்ணாமலையும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் ஆன மீனா, மனோஜ் இணைந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது, மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியாவும், மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீ தேவாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த வீடியோவில் ஸ்ரீ தேவாவை வாடா போடா பேசி வெளுத்து வாங்கியுள்ளார் மீனா. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement