• May 21 2024

சாந்தனுவிடம் அப்பாவின் ஜாதியை கேட்ட முக்கிய நபர்..படப்பிடிப்பில் நடந்த அவமானம்..கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமுதாயத்தில் ஜாதி பாகுபாடு, அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் கொலைகளும் இப்போதும் சமூகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அத்தோடு அது குறித்து பல திரைப்படங்களும் வெளியாகி இருந்தாலும் சமுதாயத்தில் இன்னும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படாமல் தான் இருக்கிறது. எனினும்  அதை பற்றி தற்போது உணர்வுபூர்வமாக நடிகர் சாந்தனு கூறி இருக்கிறார்.

மேலும் ஒரு படத்தில் விவேக் கூட சொல்வார் இந்த மாதிரி ஆட்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்று அது போல தான் இப்போதும் பலர் இன்னும் பழமையை பேசிக்கொண்டும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி இருக்கின்றனர். எனினும் அது குறித்து பிரபல நடிகர் தயாரிப்பாளரின் மகனான சாந்தனு தனக்கு நடந்த உண்மை சம்பவம் பற்றி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் பாக்யராஜின் மகனாக இருக்கும் சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். அத்தோடு இவர் நடித்த சக்கரகட்டி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. எனினும் அதை தொடர்ந்து அவருக்கு அதிகமான திரைப்படங்கள் பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்காத நிலையில் சமீபத்தில் அவர் ராவணக்கோட்டம் என்ற படம் நடித்து வெளியாகி இருக்கிறது.

ராவண கூட்டம் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் பரவிக் கொண்டிருந்தாலும் தற்போது இந்த திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எனினும் இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங்கிற்க்காக நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்ற போது நடந்த சம்பவம் நெருடலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ராமநாதபுரத்தில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது அங்கு இருக்கும் ஒரு பள்ளிக்கு நடிகர் சாந்தனு சென்று இருக்கிறார். எனினும் அப்போது அங்கு இருக்கும் ஹெட் மாஸ்டர் சாந்தனுவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த ஒரு நபரை அழைத்து சாந்தனுவிற்கு டீ வாங்கி வரச் சொல்லி அனுப்பி இருக்கிறார். இதன் பின்னர் உங்க அப்பா என்ன ஆளு என்று நேரடியாகவே கேட்டாராம்.

இதன் பின்னர்  சிறிது நேரம் சாந்தினு யோசித்து தன்னுடைய அப்பாவின் ஜாதியை பற்றி சொன்ன பிறகு தான் அவருக்கு கையில் டீயே கிடைத்ததாம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் நொந்து போய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பல குழந்தைகளுக்கு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் கூட இந்த மாதிரி பழமையிலும் மன நிலையில் மூழ்கி இருக்கும் நிலையில் அவரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement