• May 21 2024

AK61 படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்- செம ஹான்சம் லுக்கில் அஜித்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை வலிமை திரைப்பட இயக்குநரான எச். வினோத் இயக்குவதோடு போனி பூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அஜித் மாஸாக நிற்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement