• May 20 2024

விக்ரம் படத்தில் அவர் எப்படி வருவார் லாஜிக்கை மீறிய லோகேஷ்-ஏமாந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். நேற்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாக முன் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் படம் ரிலீஸாகிவிட்ட கிட்டதட்ட கைதி 2 என்று சொல்லுமளவுக்கே இரண்டு படங்களுக்கும் அதிகளவில் ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் கைதி படத்திலேயே கொலை செய்யப்பட்டு விட்ட அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்தில் அதே பாத்திரமாகவே வருகிறார். அது மட்டுமில்லாமல் அவர் டில்லி சம்மந்தமான வசனங்களையும் பேசுகிறார். லோகேஷின் லாஜிக் மீறல் ரசிகர்களை வெகுவாக குழப்பி ஏமாற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement