• Sep 20 2024

திவ்யா எலிமினேட்டில் தொடங்கிய பிரச்சினை...பிரியங்காவின் பேச்சுரிமை தடுக்கப்பட்டது! மனம் திறந்த குரேஷி

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் என்றால் அது குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து மணிமேகலை திடீரென விலகியதும் அதற்கு காரணம் பிரியங்கா என்றதும் தான்.

இதைத் தொடர்ந்து பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையில் உள்ள பிரச்சனையில் பல பிரபலங்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருவதோடு இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள குரோஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

இந்த பிரச்சனை திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன தினத்தில் இருந்து தான் ஆரம்பித்தது. திவ்யா துரைசாமி ஒவ்வொருவர் குறித்தும் பேசினார். அதன் பின்பு பிரியங்கா திவ்யா பற்றி பேசலாமா என கேட்டார். அதற்கு ரக்சன் ஓகே என்றார். ஆனால் மணிமேகலை எதுவுமே கூறவில்லை. ஒரு சைகை கூட காட்டவில்லை. அதன்பின் திவ்யா குறித்து பிரியங்கா பேச வேண்டும் என கேட்கவும், உடனே மணிமேகலை நீங்கள் பேச வேண்டாம் ஏற்கனவே நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி என பேசி வருகின்றார்கள் என வேண்டாம் என  கூறிவிட்டார்.


இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு குடும்பமாக இருக்கும் இடத்தில் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். பிரியங்காவும் நான் திவ்யா பற்றி பேச வேண்டும் என்று தான் கூறினார். ஆனால் மணிமேகலை வேண்டாம் என மிகவும் ஸ்ட்ரிக்காக கூறிவிட்டார். இதனால் பிரியங்கா ஹார்ட் ஆகி வெளியேறினார் இப்படித்தான் அந்த வாரம் சூட்டிங் நடந்தது.

அடுத்த வாரம் சூட்டிங் தொடங்கும் போது கடந்த வாரம் நடந்த விஷயங்கள் பற்றி ஒரு முறை பேசிவிட்டு ஷூட்டிங் தொடங்கலாம் என பிரியங்கா நினைத்தார். சக போட்டியாளராக என்னுடைய பேச்சுரிமை தடுக்கப்பட்டது என்பதை அவர் வெளிப்படுத்த நினைத்தார். 

இப்படியான நிலையில் தான் பிரியங்கா பேசினார். ஆனால் மணிமேகலை அதனை ஏற்கவில்லை. நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்னால் அப்படி செய்ய முடியாது. எனக் கூறிவிட்டு கேரவனுக்கு சென்றார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கு ஷுட்டிங் நடக்கவில்லை.

நான் விசாரித்த வரையில் மேனேஜ்மென்ட்டோ, பிரியங்காவோ யாருமே மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை என்ற விஷயத்தை இங்கு எடுத்து வருகின்றார். அனைவருக்கும் சுயமரியாதை உள்ளது. பிரியங்காவை பேச அனுமதித்திருக்கலாம். உங்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கின்றது என்றால் அதனை அவரிடம் தனியாக பேசியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர்கள் கூட இப்படி சண்டை எல்லாம் நடக்கின்றதே என அதிர்ச்சியாக காணப்பட்டார்கள் என குரேஷி தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement